Monday, November 9, 2015

பிறந்த வீட்டு சீதனம் – பகுதி 1.




கோபு அண்ணாவிடமிருந்து சீதனம் பெறுவது எனக்கொன்றும் புதிதல்ல.  என் பிறந்த நாளுக்கு, எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு, ஏன் போனசாக என் மகள் கல்யாணத்திற்கு, என் பேத்தியின் பிறந்த நாளுக்கு என்று பலமுறை பெற்றிருக்கிறேன்.

ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமான சீதனம்.   தீபாவளிக்கு பிறந்தவீட்டு சீதனம்.

 


இந்த ரூபாய் நோட்டுக்கள எப்படி எடுக்கணும்ன்னு எனக்கு அனுப்பின மின்னஞ்சல்ல சொல்லி இருந்தார் கோபு அண்ணா.  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இதை பிரிக்கவே போறதில்லை.  என் கைக்கு எப்படி வந்து சேர்ந்ததோ அப்படியே வைத்திருப்பேன்.

சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும் வாய்ப்பை கோட்டைவிட்ட எனக்கு (அலுவலக வேலை, வீட்டு வேலை, பெண்ணின் கல்யாணம், பேத்தியின் ஆக்கிரமிப்பு – பேத்திதான் எங்கள் நேரம், மனது எல்லாவற்றையும் மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டாளே) ஆறுதலாக இந்த சுலபமான 
பின்னூட்டப் போட்டி.   

ஆனால் ஒன்று. இந்தப் போட்டி அறிவிப்பிற்கு முன்பே நான் கோபு அண்ணாவிடம், “நீங்கள் என் வலைத்தளத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு பதிவுக்கும் (ஆமாம் மொத்தப்பதிவுகளே தம்மாத்தூண்டுதான்) பின்னூட்டம் கொடுத்துள்ளது போல் நானும் உங்கள் வலைத் தளத்திற்கு வந்து எல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ (கொஞ்சமா, நஞ்சமா, அம்மாஆஆஆஆடி எழுநூத்தி ஐம்பது) பதிவுகளுக்கும் கண்டிப்பா பின்னூட்டம் கொடுத்துடறேன்’னு உதார் விட்டேன்.   ஆனா இதை முடிக்க நான் பட்ட பாடு.   எப்படியோ உருண்டு, பெரண்டு முடிச்சுட்டேன். 

சக பதிவர்களை கௌரவிப்பதிலும், ஊக்குவிப்பதிலும் கோபு அண்ணாவிற்கு இணை அவரே தான்.  அப்படிப்பட்ட கோபு அண்ணாவிடமிருந்து இந்தப் பரிசு பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.   ஆமாம். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப்படணும் இல்லையா?

சாதனையாளர் விருது  

 

இதைப் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது.  

 750 பதிவுகள், பலப்பல பரிசுகள் இவர் பெற்றதும் இல்லாம விமர்சகர்களுக்கும் தாராளமா வழங்கி,   

ஆனா இவர் வலைத் தளத்துல 

”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்”

 அப்படீன்னு போட்டுப்பாராம்.

ஆனால் எனக்கு சாதனையாளர் விருதுன்னு போடுவாராம்.    

சிரிப்புத்தான் வருகுதைய்யா





பாருங்க.  என் வலைத் தளத்தின் முகவரிகளை அழகா கொடுத்திருக்கார்.  இதை கண்டிப்பா இவர் வலைத் தளத்தில் போடுவார்.  அதற்கு பின்னூட்டங்களோ நூத்துக் கணக்குல வரும்.  இதுல கொஞ்சம் பேராவது என் வலைத் தளம் பக்கம் வந்து எட்டிப் பார்ப்பாங்க.   இது தீவாளி போனசு. 

...............தொடரும்

62 comments:

  1. Very Good.
    Its a pleasent feeling getting gift from an elder brother.
    You got it.
    Congragulations.

    ReplyDelete
    Replies
    1. Thank you Vijayalakshmi for your visit to my blog and your comments.

      Delete
    2. vijayalakshmi November 9, 2015 at 7:29 AM

      ஆஹா, வாங்கோ விஜி. வணக்கம்மா. செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? உங்களைப்பார்த்து எவ்ளோ நாளாச்சும்மா. இங்காவது இன்று உங்களைக் கண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிம்மா.

      முடிஞ்சா என் பக்கமும் கொஞ்சம் வந்து எட்டுப்பாருங்கோ, விஜி. http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

      பிரியமுள்ள கோபு

      Delete
    3. அன்புள்ள விஜி,

      ’எட்டுப்பாருங்கோ’ என்று நான் மேலே எழுதியுள்ள வார்த்தை ’எட்டிப்பாருங்கோ’ என இருக்க வேண்டும்.

      அதை நம் ஜெயாவுக்கு அனுப்பியபிறகே என்னிடம் உள்ள நகலை நான் எட்டிப்பார்த்தேன்.

      அவசரத்தில் எழுத்துப்பிழையாகியுள்ளது என்பதைத் தெரிந்து என் தலையில் நானே ஒரு குட்டுப் போட்டுக்கொண்டேன்.

      - கோபு

      Delete
    4. //’எட்டுப்பாருங்கோ’ என்று நான் மேலே எழுதியுள்ள வார்த்தை ’எட்டிப்பாருங்கோ’ என இருக்க வேண்டும். //

      ஒண்ணும் தப்பு இல்லை. முன்னாடி ‘ஒரு’ சேர்த்துட்டா ‘ஒரு எட்டுப்பாருங்கோ’ன்னு சொன்னா மாதிரி ஆகிடும்.

      அனாவசியமா குட்டிக்க வேண்டாம்.

      Delete
    5. Jayanthi Jaya November 14, 2015 at 6:09 AM

      //ஒண்ணும் தப்பு இல்லை. முன்னாடி ‘ஒரு’ சேர்த்துட்டா ‘ஒரு எட்டுப்பாருங்கோ’ன்னு சொன்னா மாதிரி ஆகிடும்.//

      :) ரஸித்து மகிழ்ந்தேன். :)

      ’எட்டுப்பாருங்கோ’என்ற வார்த்தைக்கு முன்னாடி ஒரு, ’ஒரு’ போடணும்ன்னு ஏன் முன்னாடியே நீங்க சொல்லவில்லை ஜெயா :)

      Delete
  2. je maamikkum ungkaLukkum vazththukkaL

    ReplyDelete
    Replies
    1. என் வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜலீலா

      Delete
    2. Jaleela Kamal November 9, 2015 at 7:33 AM

      அன்புள்ள மேடம், வாங்கோ, வணக்கம். நலம். நலமறிய ஆவல்.

      மிகப்பெரிய பிரபலமான ’ஜெ’ மாமி பதிவுன்னா உடனே ஓடியாந்து விடுறீங்கோ. :)

      ஆனாக்க, பாவம் .... அந்தக்குட்டிப்பெண் மெஹ்ருன் நிஸா எழுதியுள்ள உருக்கமான கடிதாசிப்பக்கம் எட்டியே பார்க்க மாட்டீங்கறீங்களே, மேடம். இது நியாயமோ :)))))

      முடிஞ்சா வாங்கோ ப்ளீஸ் ...
      http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

      அன்புடன் கோபு

      Delete
    3. கோபு அண்ணா

      நாங்கள்ளாம் பழைய தோழிகள். ஆனாலும் ஒருத்தர் வலைத்தளத்துக்கு இன்னொருத்தர் வருகை தரதில்லை.

      ஏதோ அதிசயமா ஜலீலா எட்டிப் பார்த்திருக்கா.

      Delete
  3. மிக்க சந்தோஷம்
    நான் நேரடியாக இந்தப் பரிசினைப்
    பார்த்து பிரமித்து இருப்பதால்
    இதன் அருமை தெரியும்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரமணி சார்.

      தினமும் இந்தப்பரிசினை தொட்டுத் தொட்டு மகிழ்கிறேன்.

      சென்னையில் 3,4 நாட்கள் கர்ண்ட் விட்டு விட்டு வந்தது. அத்துடன் INTERNETம் வேலை செய்யவில்லை. அதனால்தான் தாமத பதில். உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
    2. Ramani S November 9, 2015 at 7:57 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //மிக்க சந்தோஷம். நான் நேரடியாக இந்தப் பரிசினைப் பார்த்து பிரமித்து இருப்பதால் இதன் அருமை தெரியும்//

      பரிசு வென்ற கோவைக்காரர் ஒருவர், மதுரைக்காரராகிய தங்களிடம், புதுக்கோட்டையில் காட்டி மகிழ்ந்ததாக நானும் கேள்விப்பட்டேன்.

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      Delete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி.

      Delete
  5. ஆஹா! வாழ்த்துகள்! பாராட்டுகள்! அண்ணா வீட்டிலிருந்து தங்கைக்கு தீபாவளிச் சீதனம்! வைகோ சாரின் இந்த அன்பு உள்ளத்தை என்னவென்று சொல்ல. மிக்க மகிழ்ச்சி.

    நாங்கள் இந்தப் பின்னூட்டப்போட்டியில் கலந்து கொண்டு பாதியில் விட்டுப் போக நேரிட்டது. குறும்பட வேலைகளால். சரி பின்னூட்டப் போட்டியில்தான் கலந்துகொள்ள முடியவில்லை அட்லீஸ்ட் பதிவுகள் பார்த்து பின்னூட்டம் இடலாம் என்ற ஆசை...நேரம்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

      என் வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

      அடடா! இன்னும் முழுசாக இரண்டரை மாதங்கள் இருக்கிறது சார். தாங்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு மீதி பின்னூங்களை இட்டு வெற்றி பெற மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

      Delete
    2. Thulasidharan V Thillaiakathu November 9, 2015 at 8:38 AM

      வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      -=-=-=-=-=-

      //அடடா! இன்னும் முழுசாக இரண்டரை மாதங்கள் இருக்கிறது சார்.//

      அவசரத்திலும், ஆர்வத்திலும், தலைகால் புரியாத சந்தோஷத்திலும் இந்த ஜெயா அம்மா ஏதாவது தப்புத்தப்பா சொல்றாங்கோ. போட்டி முடிய இன்னும் ஒன்றைரை மாதமே உள்ளது. அதை இரண்டரை மாதம்ன்னு எழுதியிருக்காங்கோ. அதனால் ஜாக்கிரதை சார்.

      இது சும்மா தங்களின் ஓர் தகவலுக்காக மட்டுமே.

      அன்புடன் VGK

      Delete
    3. ஆமாம் இல்ல. ஒன்றரை மாதம்தான் இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. துளசிதரன்சார். முயற்சி செய்யுங்கள். அண்ணாவிடம் இன்னும் நிறைய விசிறிகள் (பண) இருக்கு.

      Delete
    4. Thulasidharan V Thillaiakathu November 9, 2015 at 8:38 AM

      Sir,

      நான் மேலே எழுதியுள்ளதில் ’ஒன்றைரை’ என்ற வார்த்தை உள்ளது பாருங்கோ ..... அதை ’ஒன்றரை’ (1 + 1/2) என மாற்றிப் படித்துக்கொள்ளுங்கோ. ஏதோவொரு அவசரத்தில் எழுத்துப்பிழையாகி விட்டது. - VGK

      Delete
  6. சைனா விசிறி போல் அழகாய் விரிந்த, புத்தம் புதிதான 50 ரூபாய்த் தாள்களின், வரிசை எண் மாறாத அணிவகுப்பு. அதனை கலைக்க யாருக்குத்தான் மனம் வரும்? அதிலும் உங்களுடைய பிரியமான கோபு அண்ணாவால் அன்பளிப்பாய் அளிக்கப்பட்ட விசிறி வாழை அடுக்கு இது. – வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

    (கோபு அண்ணாவிற்கு .. பணத்தாள்களின் அடுக்கின் கீழ் உள்ள தேதிதான் (01-01-2016) என்னைக் குழப்புகிறது)

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ சாருக்கு,

      வாங்கோ சார், வணக்கம்.

      //(கோபு அண்ணாவிற்கு .. பணத்தாள்களின் அடுக்கின் கீழ் உள்ள தேதிதான் (01-01-2016) என்னைக் குழப்புகிறது) //

      இந்த 100% பின்னூட்டம் இடும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு என்னால் அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள்: 31.12.2015 { Please refer: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }

      அந்தத்தேதி முடிந்தபிறகு 01.01.2016 அன்று பரிசு கொடுத்தால் தானே பொருத்தமாக இருக்க முடியும். அதனால் மட்டுமே அதில் தேதி என்னால் அவ்வாறு 01.01.2016 என எழுதப்பட்டுள்ளது.

      இந்த என் அவசரக்குடுக்கை தங்கச்சி (தேள் கொடுக்கு) கெடு நாளுக்கு மிகவும் முன்னாடியே போட்டியில் வென்று விட்டார்கள். அதனால் நானும் உடனடியாக பரிசுத்தொகையினை அனுப்பி வைத்து விட்டேன்.

      அவ்வாறு நான் அதில் தேதி போட்டிருக்கா விட்டால், இது ஏதோ தீபாவளிக்காக தன் அன்பு கோபு அண்ணாவிடமிருந்து வந்துள்ளதோ என நினைத்து, தனியே வைத்துக்கொண்டு, மீண்டும் 01.01.2016 அன்று ”100% பின்னூட்டப்போட்டிக்கான பரிசு என்ன ஆச்சு?” எனக்கேட்கக்கூடிய ஆபத்தும் இதில் உண்டல்லவா !

      அதனால் ஓர் முன்னெச்சரிக்கையாகவும் அந்தத் தேதியினை அதில் எழுதியுள்ளேன். :)

      ஆனால் எங்கள் ஜெயா .... தங்கமோ தங்கம் .... அப்படியெல்லாம் தப்பாக நினைத்து, மீண்டும் மீண்டும் பரிசு கேட்க மாட்டாங்கோ.

      தங்களுக்கு இப்போது இதுவிஷயம் குழப்பம் ஏதும் இல்லாமல் நன்கு விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.

      அன்புடன் VGK

      Delete
    2. ரொம்ப குழம்பிட்டீங்களோ இளங்கோ சார்.

      //சைனா விசிறி போல் அழகாய் விரிந்த, புத்தம் புதிதான 50 ரூபாய்த் தாள்களின், வரிசை எண் மாறாத அணிவகுப்பு. அதனை கலைக்க யாருக்குத்தான் மனம் வரும்?//

      ஆமாம். அதை அப்படியே வைத்திருக்கப் போகிறேன்.

      இளங்கோ சார் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
    3. Jayanthi Jaya November 14, 2015 at 4:50 AM

      //ஆமாம். அதை அப்படியே வைத்திருக்கப் போகிறேன்.//

      பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறையும் ஜெயா.

      அதுதான் போட்டோ படம் எடுத்து பதிவிலும் போட்டாச்சே ...

      அந்தப் பணத்தை உடனே எடுத்து செலவழித்துக்கொள்ளுங்கோ ஜெயா.

      நாளடைவில் அந்த ரூபாய் நோட்டுக்கள் அந்த ப்ளாஸ்டிக் பேப்பர் பையில் அப்படியே சப்புன்னு ஒட்டிக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது.

      நம் லயாக்குட்டிக்கு பிடித்த ஏதாவது தின்பண்டங்கள் + விளையாட்டு சாமான்கள் வாங்கிக்கொடுங்கோ, ப்ளீஸ்.

      Delete
  7. பாராட்டுகள். பிறந்த வீட்டு சீதனம் என்றால் சும்மாவா? திரு.வைகோ அவர்களின் தாரளம் யாருக்கும் வராது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா. பிறந்த வீட்டு சீதனம் எங்களுக்கு (பெண்களுக்கு) ரொம்ப ரொம்ப உசத்தி தான்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
    2. பழனி. கந்தசாமி November 9, 2015 at 1:52 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //பாராட்டுகள். பிறந்த வீட்டு சீதனம் என்றால் சும்மாவா? திரு.வைகோ அவர்களின் தாரளம் யாருக்கும் வராது.//

      அடடா, நீங்க இரண்டுபேர் போதும் ...... என்னை ஒருவழி பண்ணி கலாய்ப்பதற்கு. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      { http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_17.html உங்களின் இந்தப்பதிவுக்கு இந்த ஜெயா அம்மா வருவாங்கன்னு நான் எதிர்பார்த்தேன். ஆனால் வரவே இல்லையே .... அதை ஏன்னு கேட்டீங்களா, சார்.

      என் வீதத்திற்கு நானும் எதையோ கொளுத்திப் போட்டுவிட்டேன். எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ் ... நான் இத்துடன் எஸ்கேப்..... :) }

      அன்புடன் VGK

      Delete
    3. வாரேனுங்கோ. கண்டிப்பா வாரேன்.

      Delete
  8. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

      Delete
  9. வாழ்த்துகள், பாராட்டுகள். தீபாவளிக்கு அருமையான பிறந்த வீட்டுச் சீதனம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. திருமதி கீதா சாம்பசிவம் - வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
    2. Geetha Sambasivam November 10, 2015 at 1:44 AM

      ஆஹா, வாங்கோ செள. கீதா மாமி ..... வணக்கம்.

      //வாழ்த்துகள், பாராட்டுகள். தீபாவளிக்கு அருமையான பிறந்த வீட்டுச் சீதனம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் ஜெயாவுக்கான சிறப்பு தீபாவளி வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபு

      Delete
  10. ஆஹா, பிறந்த வீட்டுப்பெருமையை இப்படி ஒரேயடியாகப் பீத்திக்கொண்டவர்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை, ஜெயா. சரி அது போகட்டும்.

    போட்டிக்கான இறுதித்தேதி 31.12.2015 என்றல்லவா எனக்கு ஞாபகம். அதற்குள் போட்டியில் கலந்துகொண்டு, ஒருவழியாக முடித்து, பரிசும் கையில் வாங்கிவிட்டீர்களா ! எனக்கு ஒரே ஆச்சர்யமாக உள்ளதே !!

    இது ஒருவேளை கனவாக இருக்குமோ என்று எனக்கு சந்தேகிக்கத் தோன்றியது. இப்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் நான் (வலைப்பதிவுகள் பக்கம் போகாமல்) நிம்மதியாகத் தூங்கி வழிவதால், இது நிச்சயமாகக் கனவாகவும், ஜெயாவின் கற்பனையாகவும்தான் இருக்கும் என்று முதலில் முடிவே செய்துவிட்டேன்.

    >>>>> தொடரும் >>>>>

    ReplyDelete
    Replies
    1. //பிறந்த வீட்டுப்பெருமையை இப்படி ஒரேயடியாகப் பீத்திக்கொண்டவர்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை, ஜெயா. சரி அது போகட்டும். //

      பின்ன. பொறந்தாத்துப் பெருமையை உடன்பிறந்தானிடம் சொன்னாளாம்ன்னு பழமொழியே உண்டே.

      //இது ஒருவேளை கனவாக இருக்குமோ என்று எனக்கு சந்தேகிக்கத் தோன்றியது.//

      மன்னியை விட்டு நறுக்குனு கிள்ளிவிட சொல்ல வேண்டியதுதான். கனவா, நனவான்னு தெரியறதுக்கு. ஆனா மன்னி கிள்ள மாட்டாளே, என்ன செய்ய?

      Delete
    2. Jayanthi Jaya November 10, 2015 at 4:16 AM

      //மன்னியை விட்டு நறுக்குனு கிள்ளிவிட சொல்ல வேண்டியதுதான். கனவா, நனவான்னு தெரியறதுக்கு.//

      ஆமாம். இதில் ரொம்ப கவலை ........ ஜெயாவுக்கு.

      //ஆனா மன்னி கிள்ள மாட்டாளே, என்ன செய்ய?//

      சும்மா இருங்கோ ’ஜெ’ .... இதைப்படித்ததும் நறுக்குன்னு யாரோ என்னைக் கிள்ளிவிட்டதுபொல சொப்பனம் கண்டு திடுக்கிட்டு எழுந்துகொண்டேனாக்கும் :)))))

      இப்படியா தோல் கிழிந்து ரத்தம் வரக் கிள்ளுவா ????? தேள் கொடுக்குக் கொட்டினாப்போல இன்னும் வலிக்குது எனக்கு. பாவம் நம் ரமணி, சார். :)

      Delete
  11. பிறகு நீண்ட நேரம் நான் எனக்குள் யோசித்துப்பார்த்தேன், ஜெயாவின் இந்தப்பதிவின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று.

    ’தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும்’ என்ற ஜெயாவின் நல்ல குணம் எனக்கு அதில் நிறையவே தெரிய ஆரம்பித்தது.

    இந்தத்தங்களின் பதிவினைப்பார்க்கும் வேறு யாராவது ஒருவராவது இனி இருக்கும் 50 நாட்களுக்குள் இதே மிகச்சுலபமான போட்டியில் கலந்துகொண்டு, தினம் சராசரியாக 15-20 பதிவுகள் வீதம் படு ஸ்பீடாக பின்னூட்டங்கள் கொடுத்து, இறுதியில் கெடுத்தேதியான 31.12.2015க்குள் வெற்றிபெற்று, இதே ஆயிரம் ரூபாய் பணவிசிறியையும், சாதனையாளர் விருதினையும் அவர்களும் பெறமாட்டார்களா என்ற தங்களின் பொதுநலமும், விசாலமான மனப்பான்மையும் என்னை மிகவும் வியக்க வைக்கிறது.

    அதற்காக தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜெயா.

    வாழ்க !

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
  12. //’தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும்’ என்ற ஜெயாவின் நல்ல குணம் எனக்கு அதில் நிறையவே தெரிய ஆரம்பித்தது. //

    அதே அதே சபாபதே.

    கொஞ்சம் மேலே போய் பாருங்க. திரு துளசிதரனிடம் இப்பதான் சொல்லி இருக்கேன். மிச்சப் பின்னூட்டங்களை முடித்து பரிசை வெல்லும்படி.

    நன்றிக்கு நன்றி.

    ReplyDelete
  13. ஜெயந்தி ஆண்டி வாழ்த்துகள். குருஜி கையிலேந்து பரிசு வாங்குவது எம்மாம் பெரிய அதிஸ்டம். எம்மாம் பெரிய தடங்கலு வந்தா காட்டியும் கெலிச்சு போட்டீகல்லா. சாதிச்சு காட்டி போட்டீக. அதா சாதனையாளர் விருது வாங்கிட்டீச்க.

    ReplyDelete
    Replies
    1. வாம்மா mru முழுப்பெயர் தெரியலையே.

      ஆமாம் பெண்ணே கோபு அண்ணா கையில் இருந்து பரிசு வாங்கியது எனக்கு பெரிய ஐஸ்வர்யம் ஆச்சே. உங்க கடிதத்துக்கு (அண்ணாவின் வலைத் தளத்தில்) பின்னூட்டம் கொடுக்கறேன். இப்ப பேத்தி வந்துட்டா கதை சொல்லச் சொல்லி. அப்புறம் வருகிறேன்.

      Delete
    2. mru November 10, 2015 at 4:21 AM

      //ஜெயந்தி ஆண்டி வாழ்த்துகள். குருஜி கையிலேந்து பரிசு வாங்குவது எம்மாம் பெரிய அதிஸ்டம். எம்மாம் பெரிய தடங்கலு வந்தா காட்டியும் கெலிச்சு போட்டீகல்லா. சாதிச்சு காட்டி போட்டீக. அதா சாதனையாளர் விருது வாங்கிட்டீச்க.//

      வாங்கோ, முறுக்கு ...... ஸாரி ..... முருகு .

      ’பெரிய அதிஸ்டம்’ என நீங்க எழுதியுள்ளதைப் படித்ததும் எனக்கு உங்க ’ஜெயா ஆண்டி’ நேரில் கொடுத்துப்போன பெரிய ... மிகப்பெரிய .... நெய்யில் செய்த அதிரஸம்தான் உடனே என் ஞாபகத்துக்கு வந்தது. அது டேஸ்டோ டேஸ்டூஊஊஊ.

      உங்க பெயரைப் பார்க்கும் போதெல்லாம் அவங்க எனக்குக் கொடுத்துட்டுப்போன மிகப்பெரிய ’சீர் முறுக்கு’தான் நினைவுக்கு வருகிறது.

      அது மட்டுமா ..... ‘மிகப்பெரிய லாடு’ வேறு கொடுத்துட்டுப் போனாங்கோ.

      இங்கும் இவர்கள் பக்கம் வந்து ஏதேதோ நம் அதிரா போலச் சொல்லியுள்ளது படிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு.

      அன்புடன் குருஜி கோபு

      -=-=-=-=-=-=-=-=-=-

      பின் குறிப்பு:

      [எங்க ஜெயா ..... ஆண்டி அல்ல ..... மிகப்பெரிய கோடீஸ்வரியாக்கும். :))))))

      ஓஹோ JAYA AUNTY ன்னு ஒரு வேளை சொல்ல வந்திருப்பீங்களோ ! ]

      Delete
    3. ஆண்டியும் அல்ல AUNTYயும் அல்ல. பாட்டின்னு சொன்னாலும் சரி. உங்கள் வாக்கில் கோடீஸ்வரியாகிடறேன்.

      Delete
    4. Jayanthi Jaya November 14, 2015 at 6:14 AM

      //ஆண்டியும் அல்ல AUNTYயும் அல்ல. பாட்டின்னு சொன்னாலும் சரி. உங்கள் வாக்கில் கோடீஸ்வரியாகிடறேன்.//

      கோடி
      கோடியாய் இன்பங்கள் பெற்று, பல
      கோடிகளுக்கு அதிபதியாகி, என்றும்
      கோடீஸ்வரியாகவே திகழ்ந்திட
      கோபு அண்ணாவின் அன்பான ஆசிகள்.

      Delete
  14. விக்கிரமாதித்தன் போல் முயற்சியில் தளராமல் போட்டியில் வென்று கோபு சாரிடமிருந்து அழகான & மதிப்புமிக்க பரிசை வென்றிருப்பதற்குப் பாராட்டுகள் ஜெயந்தி மேடம்.. தீபாவளியின் மகிழ்வை இரட்டிப்பாக்கிய கோபு சாருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். என்ன இருந்தாலும் உங்களோட எல்லாம் போட்டி போட முடியாது. இந்தப் பரிசும் கிடைக்கலைன்னா கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்திருக்கும்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி கீத மஞ்சரி

      Delete
    2. கீத மஞ்சரி November 10, 2015 at 9:38 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //போட்டியில் வென்று கோபு சாரிடமிருந்து அழகான & மதிப்புமிக்க பரிசை வென்றிருப்பதற்குப் பாராட்டுகள் ஜெயந்தி மேடம்.. தீபாவளியின் மகிழ்வை இரட்டிப்பாக்கிய கோபு சாருக்கு வாழ்த்துகள்.//

      தாங்கள் இங்கும் அன்புடன் வருகை தந்து அழகான வாழ்த்துகளுடன் கருத்துக்கள் கூறியிருப்பதில் எனக்கும் என் மகிழ்வு இரட்டிப்பாகவே ஆகியுள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  15. சக பதிவர்களை கௌரவிப்பதிலும், ஊக்குவிப்பதிலும் கோபு அண்ணாவிற்கு இணை அவரே தான்.//


    உண்மைதான் நீங்கள் சொல்வது. .


    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் எல்லாம் வலைத்தளம் வைத்திருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணம் கோபு அண்ணா தான்.

      வருகைக்கு மனமார்ந்த நன்றி கோமதி அரசு

      Delete
    2. கோமதி அரசு November 11, 2015 at 4:06 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சக பதிவர்களை கௌரவிப்பதிலும், ஊக்குவிப்பதிலும் கோபு அண்ணாவிற்கு இணை அவரே தான்.// - ஜெயா

      //உண்மைதான் நீங்கள் சொல்வது. . வாழ்த்துக்கள்.//
      - கோமதி அரசு மேடம்.

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
  16. பார்க்கவும்,படிக்கவும், ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.கொடுத்த,பெற்றுக்கொண்ட இரு சாதனையாவர்களுக்கும் வாழ்த்துகள்,தீபாவளியுடன் சேர்த்து. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி காமாட்சி அம்மா.

      கொடுத்தவர்தான் சாதனையாளர். நான் அல்ல.

      Delete
    2. காமாட்சி November 12, 2015 at 2:57 AM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //பார்க்கவும், படிக்கவும், ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கொடுத்த,பெற்றுக்கொண்ட இரு சாதனையாவர்களுக்கும் வாழ்த்துகள், தீபாவளியுடன் சேர்த்து. அன்புடன்//

      தாங்கள் சிரமம் பாராமல் இவ்விடம் வருகை தந்து எங்கள் இருவரையுமே சேர்ந்து வாழ்த்தியுள்ளது மட்டுமே எல்லாவற்றையும்விட மிகப்பெரிய தீபாவளிப் பரிசாகத் தோன்றுகிறது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி.

      பிரியமுள்ள கோபு

      Delete
    3. காமாட்சி அம்மாவின் வருகையும் எனக்கு தீபாவளி பரிசுதான்.

      Delete
  17. நல்வாழ்த்துக்கள் ஜெ மாமி. இது கின்னஸை விட பெரிய சாதனை தான். கௌரவித்த வை.கோ ஐயாவிற்கு பாராட்டுக்கள் பல.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar November 14, 2015 at 9:12 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      நல்வாழ்த்துக்கள் ஜெ மாமி. இது கின்னஸை விட பெரிய சாதனை தான். கௌரவித்த வை.கோ ஐயாவிற்கு பாராட்டுக்கள் பல.//

      இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், ஜெ மாமிக்கான நல்வாழ்த்துகளுக்கும், அழகான கருத்துக்களுக்கும், எனக்கான பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
    2. வாங்க ஆசியா. என் வலைத் தளத்திற்கு வருகை தந்ததற்கு, வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  18. சக பதிவர்களை ஊக்குவிப்பதில், அவர் சிறந்த மனிதர். தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்ரா. என் வலைத்தளத்திற்கு வந்ததற்கும், வாழ்த்தியதற்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
    2. அன்புள்ள சித்ரா, வணக்கம். தங்களை அபூர்வமாக இந்த இவர்களின் பதிவினில் கண்டதில் எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

      அன்புடன் கோபு மாமா

      Delete
  19. என்னது, வெறும் பின்னூட்டம் இட்டதற்கே ஆயிரம் ரூபாய் போனசா? இவ்வளவு பெரிய்ய்ய மனசு இருந்தால் ஆபத்து சாமி!.. (உங்கள் பெருமையை ஏற்கெனவே அறிவேன். இது மேலும் ஓர் நிரூபணம்.) வாழ்த்தி வணங்குகிறேன். - இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. //என்னது, வெறும் பின்னூட்டம் இட்டதற்கே ஆயிரம் ரூபாய் போனசா? //

      போனஸ் இல்லை பரிசு. அதை நானே தீபாவளி போனசா அறிவிச்சுண்டுட்டேன்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
    2. Chellappa Yagyaswamy November 16, 2015 at 6:44 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //என்னது, வெறும் பின்னூட்டம் இட்டதற்கே ஆயிரம் ரூபாய் போனசா? இவ்வளவு பெரிய்ய்ய மனசு இருந்தால் ஆபத்து சாமி!..//

      வெறும் பின்னூட்டங்கள் அல்ல இவர்களுடையது. வெல்லம் போட்ட இனிமையான நகைச்சுவை கலந்த, மிகவும் ருசியான அதிரஸம் போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அவைகள்.

      750 பதிவுகளையும் சிரத்தையாகப் படித்து, ஆர்வமாகவும் வித்யாசமாகவும் பின்னூட்டங்கள் தருவது என்பது சாதாரணதோர் வேலையே அல்ல.

      அதுபோல சாதனை புரிவோருக்கு நான் அளிக்கும் பரிசுதொகை வெறும் சுண்டைக்காய் அளவு மட்டுமே.

      இந்த இவர்களின் பதிவுக்குத் தாங்கள் வருகை தந்து பின்னூட்டமிட்டுள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, சார். மிக்க நன்றி, சார். அன்புடன் VGK

      Delete