Tuesday, June 27, 2017





விதை உருண்டை 

மரம் நடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் வீட்டில் இடமில்லை , அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறோம் என்றெல்லாம் வருத்தப்படும் நண்பர்கள் மனது வைத்தால் காட்டையே உருவாக்கலாம். எப்படி என்றால் படத்தில் காட்டி உள்ளபடி விதைகளை சேகரித்து விதை உருண்டைகள் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வெளியூர் பயணங்களின் போது சாலையின் இருபக்கங்கள், தரிசு நிலங்களிலும் வீசி விட்டால் போதும். வயல்களில் வீசுவதை தவிர்க்கவும்.

தகுந்த சூழலில் உருண்டைகளில் உள்ள விதை முளைத்து விடும். மாறாக விதைகளாக மட்டும் வீசினால் அவை முளைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.

எனவே விதை உருண்டைகள் மூலம் மரம் வளர்ப்போம், நம் மண்ணை காப்போம் !!


No automatic alt text available.
நன்றி: பசுமை விடியல் 

3 comments:

  1. நல்லதொரு கருத்தைச் சொல்லும் பதிவு.

    ReplyDelete
  2. வீசி விட்டால் போதுமா ... முறையாக குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் விட வேண்டாமா? சரி...சரி ... முறைக்காதீர்கள் ... சாலை ஓரத்தில்தானே வீசுகிறோம் தண்ணீரை பீச்சி அடிப்பதற்கு பின்னாடி யாராவது அவ்வப்போது வராமலா இருப்பார்கள் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
    Replies
    1. அட வருண பகவான் பார்த்துக் கொள்வார். நான் வீசி எறியச் சொன்னது சாலை மட்டுமே உள்ள சாலை ஓரங்களில்.

      Delete